Mayiladuthurai Newsமயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் இன்று உலக சர்க்கரை நோய் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி - Mayiladuthurai News மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் இன்று உலக சர்க்கரை நோய் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி - Mayiladuthurai News

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் இன்று உலக சர்க்கரை நோய் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

மயிலாடுதுறை நவம்பர் 14, இன்று உலக சர்க்கரை நோய் தினமாகும். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14-ம் தேதி உலக நீரிழிவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில் இன்று மயிலாடுதுறை அரசினர் பெரியார் மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவில் தலைமை மருத்துவர் டாக்டர் இராஜசேகர் தலைமையில் சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. சர்க்கரை நோய் வராமல் நமது உடலை எவ்வாறு பாதுகாக்கவேண்டும், வந்த பின் உட்கொள்ள வேண்டிய உணவுமுறைகள் குறித்தும் சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் டாக்டர் சிவக்குமார் பேசினார். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வருடத்திற்கு ஒரு முறையாவது கண் பரிசோதனை செய்ய வேண்டும். சர்க்கரை நோயால் உடல் உறுப்புகள் அனைத்தும் பாதிக்கப்படும் என்றார் கண் மருத்துவர் ராகவி. நோயினால் ஏற்படும் பாதிப்புகளை மருத்துவர் சீனிவாசன் விளக்கமாக பொதுமக்களுக்கு எடுத்துரைத்தார். வணிகர் சங்க தலைவர் இரவிசந்திரன் பேசுகையில் மருத்துவர்களின் அறிவுறைப்படி நடந்து கொண்டால் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களும் நூறாண்டு வாழ முடியும் என பேசினார். ஜெனிபர் இனிப்பக உரிமையாளர் பவுல்ராஜ் அவர்கள் பேசுகையில் நமது மயிலாடுதுறை அரசு மருத்துவமனையின் தரத்தினை மேம்படுத்த அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என கூறினார். இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் செந்தில்ஆனந்த் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் அனைத்து சேவை சங்கத்தினர் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். உலக சுகாதார நிறுவன அறிக்கையின் படி உலகளவில் 450 மில்லியன் மக்கள் சர்க்கரை நோயுடன் வாழ்ந்து வருகின்றனர். 2.5 மில்லியன் இறப்புகள் சர்க்கரை நோயின் மூலம் ஏற்படுகிறது. உலக நீரிழிவு நோய் விழிப்புணர்வு தினத்தில் சர்க்கரை நோய் தடுப்பு முறைகளை ஊக்குவித்து, சர்க்கரை நோயிக்கான சிகிச்சை முறைகளை வலுப்படுத்தி சர்க்கரை நோய் வராமல் தீவிர கண்காணித்தலின் மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த முடியும்.
அனைத்து விதமான மொபைல்களும் சிறந்த முறையில் குறித்த நேரத்தில் சர்வீஸ் செய்து தரப்படும். ஸ்ரீராம் டெலிகம்யூனிகேசன், ராம் நிவாஸ் காம்ப்ளக்ஸ், சங்கீதா மொபைல்ஸ் பின்புறம், கச்சேரி சாலை, மயிலாடுதுறை. தொடர்புக்கு: 04364 – 227944 / 96774 15215