Mayiladuthurai Newsமயிலாடுதுறை விழுதுகள் இரத்ததான சேவை மையத்தின் இரத்ததான முகாம் - Mayiladuthurai News மயிலாடுதுறை விழுதுகள் இரத்ததான சேவை மையத்தின் இரத்ததான முகாம் - Mayiladuthurai News

மயிலாடுதுறை விழுதுகள் இரத்ததான சேவை மையத்தின் இரத்ததான முகாம்

உலகம் முழுவதும் ஒவ்வொரு இரண்டு நொடிகளுக்கும் ஒருவருக்கு ரத்தம் தேவைப்படுகிறது. விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு ரத்தம் அவசரமாகவும், அவசியமாகவும் தேவைப்படும். விபத்தில் மனிதர்கள் உயிரிழப்பதற்கு முக்கியக் காரணம் ரத்த சேதமாகும். உடனடியாக இந்த இழப்பைச் சரிசெய்வதன் மூலம், உயிர் காக்கப்படும். எனவே இரத்ததானத்தின் அவசியத்தை வலியுறுத்தி மயிலாடுதுறையில் உள்ள கல்லூரி மாணவர்கள் இணைத்து உருவாக்கிய அமைப்பே விழுதுகள் இரத்ததான சேவை மையம். இந்த அமைப்பின் மூலம் கடந்த ஐந்து ஆண்டுகளில் பல உயிர்கள் காப்பற்றபட்டுள்ளன என்பதே நிதர்சனமான உண்மை.  21.10.2018 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை, மயிலாடுதுறை தாலுகா அலுவலகம் அருகே ROA சங்க அலுவலகத்தில் விழுதுகள் இரத்ததான சேவை மையத்தின் இரத்ததான முகாம் மற்றும் விழுதுகள் அமைப்பின் ஐந்தாம் ஆண்டு துவக்க விழா ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இரத்ததான முகாமை ஸ்டார் மீடியா உரிமையாளர் உமர் துவக்கி வைத்தார். பல இளைஞர்கள் தாமாக முன்வந்து இரத்ததானம் செய்தனர். இந்த முகாமில் 55 யூனிட் இரத்தம் பெறப்பட்டு மயிலாடுதுறை அரசினர் பெரியார் மருத்துவமனையின் அரசு மருத்துவர் Dr. சிவக்குமார் M.D மற்றும் செவிலியர்கள் மூலம் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் விழுதுகள் அமைப்பின் தலைவர் தமிழரசன், செயலாளர் சூர்யா, பொருளாளர் ராகுல் ராஜ், உறுப்பினர்கள் மற்றும் திரளான பொதுமக்களும் இளைஞர்களும் கலந்து கொண்டனர்.