Mayiladuthurai Newsமயிலாடுதுறையில் பாரத ரத்னா டாக்டர் A.P.J அப்துல்கலாம் அவர்களின் பிறந்தநாள் விழா - Mayiladuthurai News மயிலாடுதுறையில் பாரத ரத்னா டாக்டர் A.P.J அப்துல்கலாம் அவர்களின் பிறந்தநாள் விழா - Mayiladuthurai News

மயிலாடுதுறையில் பாரத ரத்னா டாக்டர் A.P.J அப்துல்கலாம் அவர்களின் பிறந்தநாள் விழா

ஏவுகணை நாயகன், இளைஞர்களின் விடிவெள்ளி, இந்தியர்களின் கலங்கரை விளக்கம், தன்னம்பிக்கை நாயகன் என பல பெயர்களுக்கு சொந்தக்காரர் பாரத ரத்னா டாக்டர் A.P.J அப்துல்கலாம். இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவரும் இளைஞர்களிடம் கனவுகளை விதைத்தவருமான டாக்டர் A.P.J அப்துல்கலாமின் 87-வது பிறந்தநாள் விழா இன்று (15.10.2018) மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் பீக்காக் சென்டீனியல் லயன்ஸ் சங்கம் சார்பில் கொண்டாடப்பட்டது. அரிமா சங்க தலைவர் எஸ்.பவுல்ராஜ், செயலர் கவிஞர் இரா.சிவக்குமார், பொருளர் எஸ்.ராஜா உள்ளிட்ட அரிமா சங்க உறுப்பினர்களும் மாணவ-மாணவியர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் அரிமா சங்க நிர்வாகிகள் மாணவ – மாணவிகளுக்கு எழுதுபொருட்கள் கொடுத்து உதவினர்.