Mayiladuthurai Newsதமிழ்நாட்டை பிளாஸ்டிக் இல்லா மாநிலமாக்குவோம்! மயிலாடுதுறை இளைஞர்கள் எடுத்துக்கொண்ட உறுதிமொழி - Mayiladuthurai News தமிழ்நாட்டை பிளாஸ்டிக் இல்லா மாநிலமாக்குவோம்! மயிலாடுதுறை இளைஞர்கள் எடுத்துக்கொண்ட உறுதிமொழி - Mayiladuthurai News

தமிழ்நாட்டை பிளாஸ்டிக் இல்லா மாநிலமாக்குவோம்! மயிலாடுதுறை இளைஞர்கள் எடுத்துக்கொண்ட உறுதிமொழி

மயிலாடுதுறை ஜனவரி 1, மயிலாடுதுறையில் இளைஞர்கள் சார்பில் பிளாஸ்டிக் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டது குறித்து பொதுமக்கள் முன்னிலையில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பிளாஸ்டிக் இல்லா தமிழ்நாட்டை உருவாக்கி, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பேன் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மறுசுழற்சி செய்ய முடியாத 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என வலியுறுத்தினர். தொடர்ந்து, “நான் எனது வீட்டிலோ, சுற்றுப்புற பகுதிகளிலோ ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய மக்காத பிளாஸ்டிக் பொருள்களான பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் குவளைகள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல் மற்றும் பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் கொடிகள் போன்ற பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்டவற்றைப் பயன்படுத்த மாட்டேன் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்னர் பொதுமக்களிடம் பிளாஸ்டிக் பயன்படுத்த கூடாது என்பதை வலியுறுத்தி துணி பைகளை வழங்கினர்.
தங்கள் இல்ல கல்யாண சீர்வரிசை ஜமான்கள் மொத்தமாக வாங்க கை ராசி ஸ்தாபனம். ராஜ் எவர்சில்வர் பேன்சி ஸ்டோர். நெ.2 மெயின் ரோடு, மயிலாடுதுறை தொடர்புக்கு: 04364 – 222648