Mayiladuthurai Newsமயிலாடுதுறையில் நடைபெற்ற ரஜினி மக்கள் மன்றத்தின் சர்வ மத பிரார்த்தனை கூட்டம். - Mayiladuthurai News மயிலாடுதுறையில் நடைபெற்ற ரஜினி மக்கள் மன்றத்தின் சர்வ மத பிரார்த்தனை கூட்டம். - Mayiladuthurai News

மயிலாடுதுறையில் நடைபெற்ற ரஜினி மக்கள் மன்றத்தின் சர்வ மத பிரார்த்தனை கூட்டம்.

மயிலாடுதுறை நகர ரஜினி மக்கள் மன்றத்தின் நூறு சதவீத கிளை அமைப்பு பணிகள் நிறைவடைந்ததை முன்னிட்டும் ரஜினி அவர்களின் அரசியல் வருகை மகத்தான வெற்றியடைய வேண்டியும் சர்வ மத பிரார்த்தனை கூட்டம் கூறைநாடு, புனித அந்தோனியார் திருச்சபைபில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சர்வ மதத்தை சேர்ந்த குருக்கள், ஹஜ்ரத்கள் மற்றும் மதபோதகர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். நகர செயலாளர் பவுன் முருகானந்தம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக மாயவரத்தான் கி.ரமேஷ்குமார், மாவட்ட பொறுப்பாளர் கலியராஜ், மாவட்ட செயலாளர் ராஜேஷ்வரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் இராமகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் காமராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் திரளான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
பத்திர பதிவு, DTP ஒர்க்ஸ், ஜெராக்ஸ், கலர் ஜெராக்ஸ் மற்றும் வீடு மனை வாங்க விற்க அணுகவும். பெரிய கண்ணாரத்தெரு, நேஷனல் பர்னிச்சர் எதிரில், மயிலாடுதுறை. தொடர்புக்கு: 99428 23269