மயிலாடுதுறை மாவட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் என்பது தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். நாகப்பட்டினம் மாவட்டத்தின் மயிலாடுதுறை வருவாய் கோட்டத்தில் இருந்த 4 வருவாய் வட்டங்களைக் கொண்டு தமிழ்நாட்டின் 38ஆவது மாவட்டமாக மயிலாடுதுறை உருவாக்கப்படும் என்று 24 மார்ச் 2020 அன்று மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சட்டமன்றத்தில் அறிவித்தார். கவிபாடிய கம்பனும், பெண் விடுதலைக்கு போராடிய மூவலூர் இராமாமிர்தம் அம்மையாரும், சிம்மக்குரலோன் சீர்காழி கோவிந்தராஜனும், தமிழ் திரைப்பட உலகின் முதல் சூப்பர் ஸ்டாரான தியாகராஜ பாகவதரும், சதுரங்க விளையாட்டில் உலக சாம்பியன் பட்டம் வென்று நம் இந்திய திருநாட்டிற்கு பெருமை சேர்த்த விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்டோர் மயிலாடுதுறை மாவட்டத்தில் பிறந்த பெருமைக்குரியவர்களில் சிலர்.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள
வருவாய் வட்டங்கள்
1.மயிலாடுதுறை
2.சீர்காழி
3.குத்தாலம்
4.தரங்கம்பாடி
நகராட்சிகள்
1.மயிலாடுதுறை
2.சீர்காழி.
பேரூராட்சிகள்
1.குத்தாலம்
2.தரங்கம்பாடி
3.மணல்மேடு
4.வைத்தீஸ்வரன் கோயில்
ஊராட்சி ஒன்றியங்கள்
1.மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியம்
2.சீர்காழி ஊராட்சி ஒன்றியம்
3.குத்தாலம் ஊராட்சி ஒன்றியம்
4.செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியம்
5.கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியம்
மயிலாடுதுறை மாவட்டமானது ஒரு நாடாளுமன்றத் தொகுதியையும் மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் உள்ளிட்ட 3 சட்டமன்றத் தொகுதிகளையும் தன்னகத்தே கொண்டது.