நவம்பர் 22, 2020. விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பெயரில் 2021 சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தை துவக்கிய தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின். நேற்று இரவு 10 மணிக்கு தருமபுரம் ஆதின மடத்திற்கு வந்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், அன்பில் பொய்யாமொழி ஆகியோர் வந்தனர். அவர்களுக்கு மடத்தின் நிர்வாகிகள் வாசலில் வரவேற்பளித்து மடத்திற்கு உள்ளே அழைத்துச் சென்றார்கள்.
பின்னர் 27 -வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை தரிசித்து ஆசிப் பெற்றார் உதயநிதி ஸ்டாலின். அவருக்கு திருக்கடையூர் அபிராமி, வைத்தீஸ்வரன் கோயில் செல்வமுத்துக்குமாரசாமி, திருபுவனம் சரபேஸ்வரர், மயிலாடுதுறை குரு தட்சிணாமூர்த்தி, தருமபுரம் துர்க்கை ஆகிய ஐந்து ஆலய பிரசாதங்கள் வழங்கப்பட்டன.1972 -ல் தருமபுரம் கலைக் கல்லூரியின் வெள்ளி விழா நிகழ்ச்சியில் கருணாநிதி கலந்து கொண்ட படத்தையும், திருக்குறள் புத்தகத்தையும் நினைவுப் பரிசாக குருமகாசந்நிதானம் வழங்கினார்.
அதன்பின் குரு மகாசந்நிதானமும், உதயநிதி ஸ்டாலினும் தனிமையில் 10 நிமிடங்கள் பேசிக்கொண்டனர். இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை மயிலாடுதுறை ஆன்மிக பேரவை நிறுவனரும் மயிலாடுதுறை மாவட்ட தி.மு.க .வழக்கறிஞர் அணியின் மாவட்ட அமைப்பாளருமான வழக்கறிஞர் டாக்டர். இராம. சேயோன் செய்திருந்தார்.
Your phone number will not be published. Required fields are marked *