Breaking News
 •   |  
 • தெலுங்கானாவில் சிக்கி தவிக்கும் மயிலாடுதுறை மக்கள்
 •   |  
 • மயிலாடுதுறையில் புதிய சாலை அமைக்கும் போது, பழைய சாலையை ஏன் தோண்டி எடுப்பதில்லை? நீதிமன்றம் கேள்வி
 •   |  
 • நான்காவது முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்ததி ல் பெருமையடைகிறேன்- முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
 •   |  
 • மயிலாடுதுறை பள்ளி கட்டிட பூமி பூஜை துவக்கவிழா
 •   |  
 • மயிலாடுதுறை ரீசார்ஜ் செய்ய வந்த பெண். இளைஞர்.. இப்போ கம்பி எண்ணுகிறார் தம்பி!
 •   |  
 • மயிலாடுதுறை - இலவச கொரோனா பரிசோதனை முகாம்
 •   |  
 • சீர்காழியில் உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கும் 3 லட்சம் வழங்க முதலமைச்சர் உத்தரவு
 •   |  
 • கொரோனா நோயாளிகள் திடீர் போராட்டம்
 •   |  
 • மயிலாடுதுறை அருகே திருட்டு சம்பவம்.
 •   |  
 • மயிலாடுதுறையில் பொதுமக்களை ஏமாற்றிய நிதி நிறுவனம்
 •   |  
 • சீர்காழி அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவி தற்கொலை
 •   |  
 • குப்பையில் கிடந்த வெள்ளி கிரீடம்
 •   |  
 • மயிலாடுதுறை பழமையான சுரங்கம் கண்டுபிடிப்பு
 •   |  
 • சீர்காழியில் நடமாடும் ரேஷன் கடை திறப்பு
 •   |  
 • பிளாஸ்டிக் பை உபயோகித்த கடைகளுக்கு அபராதம்
 •   |  
 • பிளாஸ்டிக் பை உபயோகித்த கடைகளுக்கு அபராதம்
 •   |  
 • சீர்காழியில் தேசிய நெடுஞ்சாலை பெயர் பலகை சாயும் அபாயம்
 •   |  
 • சீர்காழி அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை
மயிலாடுதுறையில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படுமா?
- பிரபு | நேரம்: Sunday, August 02, 2020, 10:21 AM | Views (362)
IMG
மயிலாடுதுறையில் கிட்டதட்ட 53 ஆண்டுகளுக்கு முன் அதாவது 1965ம் ஆண்டு பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. மயிலாடுதுறை காமராஜர் பேருந்து நிலையத்தில் கடுமையான இடநெருக்கடி ஏற்பட்டதன் காரணமாக, கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு மயிலாடுதுறை நகராட்சி பூங்கா திடலில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. பயணிகளுக்குப் போதுமான அடிப்படை வசதிகள் இல்லாமலேயே ஏறத்தாழ 17 ஆண்டுகளாக இந்தத் தற்காலிகப் பேருந்து நிலையம் தொடர்ந்து வருகிறது. சிதம்பரம், தஞ்சாவூர், கும்பகோணம் மார்க்கத்திலிருந்து மயிலாடுதுறை வழியே நாகை, திருவாரூர், காரைக்கால் மார்க்கத்தில் பயணம் மேற்கொள்ள வருவோர் காமராஜர் பேருந்து நிலையத்திலிருந்து பூங்கா பேருந்து நிலையத்துக்கும், இதேபோல திருவாரூர், நாகை மார்க்கத்திலிருந்து சிதம்பரம், தஞ்சாவூர் மார்க்கத்தில் பயணிக்க வேண்டியவர்கள் பூங்கா பேருந்து நிலையத்திலிருந்து காமராஜர் பேருந்து நிலையத்துக்கும் அலைய வேண்டியுள்ளது. மாவட்டத்தின் மிகப் பெரிய வருவாய்க் கோட்டத் தலைநகரான மயிலாடுதுறைக்கு ஏற்பட்டுள்ள இந்த அவலம் மாவட்டத்தின் வேறு எந்தப் பகுதியிலும் இல்லாதது. மயிலாடுதுறைக்கு ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையம் அமைக்க நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் நகராட்சிக்குச் சொந்தமான இடம் இல்லை, பேருந்து நிலையத்துக்காக இடம் வாங்க உள்ளாட்சி சட்டத்தில் அனுமதியில்லை என்ற காரணங்களைக் கூறி பல ஆண்டுகளாக காலம் கடத்தப்பட்டது. முன்னாள் முதல்வர் செல்வி. ஜெ.ஜெயலலிதா அவர்கள் முதல்வராக இருந்த போது 2006ம் ஆண்டு பிப்ரவரியில், நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் திருவிழந்தூர் பரிமள ரெங்கநாதர் கோவில் நந்தவணத்தில் 5.91 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய பேருந்து நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. பல ஆண்டுகள் முடிவடைந்த நிலையிலும் பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணியில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதன்பிறகு அமைந்த தி.மு.க ஆட்சியில் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. எனவே தி.மு.க அரசை கண்டித்து 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மயிலாடுதுறையில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி அ.தி.மு.க., சார்பில் மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் முன்பாக அப்போதைய அமைப்பு செயலர் செம்மலை எம்.பி., தலைமையில், மாவட்ட செயலர் ஓ.எஸ்.மணியன் எம்.பி., முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 2011ல் மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி அமைந்தவுடன் மயிலாடுதுறையில் புதிய பேருந்து நிலையம் அமைக்க அதே இடம் தேர்வு செய்யப்பட்டு அந்த இடத்தை அப்போதைய தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் முனுசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்பிறகு அந்த இடமும் மாற்றம் செய்யப்பட்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, மயிலாடுதுறை அருகே உள்ள மணக்குடி கிராமத்தில் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான இடத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பரபரப்பாக நடைபெற்ற முயற்சிகள், அரசியல் காரணங்களால் மந்தமாக்கப்பட்டு, மறக்கடிக்கச் செய்யப்பட்டன. இந்நிலையில், கடந்த 2017 செப்டம்பர் மாதம் நாகையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில், மயிலாடுதுறையில் நிலவும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், மயிலாடுதுறை மணக்குடி கிராமத்தில் 13.77 ஏக்கர் பரப்பில், தனியார் பங்களிப்புடன் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்தார். இந்த அறிவிப்பு மக்களுக்கு ஓரளவு ஆறுதலை அளித்தது. ஆனாலும், மணக்குடியில் பேருந்து நிலையத்துக்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தை சுற்றி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதே தவிர வேறு எந்தப் பணியும் இங்கு இதுவரை நடைபெறவில்லை. புதிய பேருந்து நிலையத்துக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள பகுதி நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் இல்லாததால், மணக்குடி கிராமத்தை நகராட்சியில் இணைக்க வேண்டும். இல்லையெனில், தனியார் மூலம் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு நகராட்சி வசம் ஒப்படைத்தால்தான், அங்குப் பேருந்து நிலையம் அமையும் என அடுத்த முட்டுக்கட்டைகள் தற்போது வீசப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான மக்கள் வசிக்கும் பகுதியில் கால் நூற்றாண்டு காலமாக நீடிக்கும் இக் கோரிக்கைகள், ஒரு சமூகம் சார்ந்த, மதம் சார்ந்த கோரிக்கைகள் அல்ல. ஒட்டுமொத்த மக்களின் பொதுநலம் சார்ந்த கோரிக்கை. தாமதப்படுத்தப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதிக்குச் சமமானது என்பது நீதித்துறைக்கு மட்டுமல்ல, அரசு நிர்வாகத்துக்கும் பொருந்தும் என்ற வகையில், காலம் தாழ்த்தாமல் மயிலாடுதுறை மக்களின் நீண்ட கால கோரிக்கைகளுக்கு அரசு தீர்வு காண வேண்டும் என்பது மயிலாடுதுறை மக்களின் கோரிக்கை.
    Share:

Leave a Comment

Your phone number will not be published. Required fields are marked *

 

முக்கியச் செய்திகள்

Latest News