அக்டோபர் 26, 2020. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிக்கு அருகிலுள்ள திருக்கருகாவூரில் சாவித்திரி என்பவர் தனது வீட்டு வாசலில் டிரைனேஜ் கட்ட குழி தோண்ட, அதில் மனித எலும்பு மற்றும் உடல் பாகங்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
அதனையடுத்து, இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட போது இறந்தவர் திருக்கருக்காவூர் அய்யனார் கோயில் தெருவில் வசித்து வந்த சாந்தி என்ற மூதாட்டி என்பது தெரிய வந்தது. இவர், கடந்த 10 மாதங்களுக்கு முன்பு காணாமல் போனதாக மூதாட்டியின் மகனான வேலு கூறியது தெரிய வந்தது.
அதனையடுத்து, வேலுவிடம் விசாரணை மேற்கொண்ட போது,தாயிடம் வழக்கமாக சொத்தை பிரித்து தர கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு ஏற்படுவதும், 10 மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் குடித்து விட்டு வந்த வேலு மூதாட்டியை தாக்கி உயிரிழந்ததும், அதன்பின் வேலு தனது வீட்டின் எதிரே மூதாட்டியின் சடலத்தை குழி தோண்டி புதைத்ததும் அம்பலமானது. அதனையடுத்து வேலுவை சீர்காழி போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
Your phone number will not be published. Required fields are marked *