அக்டோபர் 12,2020. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அரசு மருத்துவமனை நர்சை வழிமறித்து, 8 சவரன் தாலி செயினை இரண்டு சிறுவர்கள் பறித்து சென்றனர். சீர்காழி அருகே திருநகரி கிராமத்தைச் சேர்ந்தவர் கிள்ளிவளவன் இவரது மனைவி செந்தமிழ் செல்வி(45). சீர்காழி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு, திருநகரியிலிருந்து பணிக்காக சீர்காழி நோக்கி டூவீலரில் சென்றார். டி.மணல்மேடு என்ற இடத்தில் வந்தபோது, 15 வயது மதிக்கத்தக்க இரண்டு சிறுவர்கள், செந்தமிழ்ச்செல்வியை வழிமறித்து, அவர் அணிந்திருந்த 8 சவரன் தாலி செயினை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த செந்தமிழ்செல்விக்கு கழுத்து மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. புகாரின் பேரில் வைத்தீஸ்வரன்கோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Your phone number will not be published. Required fields are marked *