Breaking News
  •   |  
  • தெலுங்கானாவில் சிக்கி தவிக்கும் மயிலாடுதுறை மக்கள்
  •   |  
  • மயிலாடுதுறையில் புதிய சாலை அமைக்கும் போது, பழைய சாலையை ஏன் தோண்டி எடுப்பதில்லை? நீதிமன்றம் கேள்வி
  •   |  
  • நான்காவது முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்ததி ல் பெருமையடைகிறேன்- முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
  •   |  
  • மயிலாடுதுறை பள்ளி கட்டிட பூமி பூஜை துவக்கவிழா
  •   |  
  • மயிலாடுதுறை ரீசார்ஜ் செய்ய வந்த பெண். இளைஞர்.. இப்போ கம்பி எண்ணுகிறார் தம்பி!
  •   |  
  • மயிலாடுதுறை - இலவச கொரோனா பரிசோதனை முகாம்
  •   |  
  • சீர்காழியில் உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கும் 3 லட்சம் வழங்க முதலமைச்சர் உத்தரவு
  •   |  
  • கொரோனா நோயாளிகள் திடீர் போராட்டம்
  •   |  
  • மயிலாடுதுறை அருகே திருட்டு சம்பவம்.
  •   |  
  • மயிலாடுதுறையில் பொதுமக்களை ஏமாற்றிய நிதி நிறுவனம்
  •   |  
  • சீர்காழி அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவி தற்கொலை
  •   |  
  • குப்பையில் கிடந்த வெள்ளி கிரீடம்
  •   |  
  • மயிலாடுதுறை பழமையான சுரங்கம் கண்டுபிடிப்பு
  •   |  
  • சீர்காழியில் நடமாடும் ரேஷன் கடை திறப்பு
  •   |  
  • பிளாஸ்டிக் பை உபயோகித்த கடைகளுக்கு அபராதம்
  •   |  
  • பிளாஸ்டிக் பை உபயோகித்த கடைகளுக்கு அபராதம்
  •   |  
  • சீர்காழியில் தேசிய நெடுஞ்சாலை பெயர் பலகை சாயும் அபாயம்
  •   |  
  • சீர்காழி அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை
மயிலாடுதுறை தேம்பாவணி திறன் வள மையத்தில் தையல் பயிற்சி மையம் திறப்பு விழா
- மயிலாடுதுறை T.பிரபு | நேரம்: Monday, October 05, 2020, 03:50 PM | Views (166)
IMG

அக்டோபர் 5, 2020. மயிலாடுதுறை மாவட்டம், சோழம்பேட்டையில் திருஇருதய அருட்சகோதரர்களால் நடத்தப்பட்டு வரும் தேம்பாவணி திறன் வள மைய வளாகத்தில் பல்சமய உரையாடல் மையம், இறை இரக்க பயிற்சி மையம் போன்ற சமய நல்லிணக்க ஒருங்கிணைப்பு பணிகள் மற்றும் சமூக நல மேம்பாட்டு திட்டப் பணிகள் ஆகியவை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் மகளிர் தையல் பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

தேம்பாவணி திறன் வள மையத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள மகளிர் தையல் பயிற்சி மையத் திறப்பு விழாவிற்கு திருஇருதய சகோதரர்கள் இல்லத் தலைவர் அருட்சகோதரர்.டேவிட்ராஜ் தலைமை வகித்தார். மைய ஒருங்கிணைப்பாளர் அருட்சகோதரர் பங்கராஸ், மணல்மேடு பங்குத்தந்தை ஆரோக்கியசாமி அடிகளார், மயிலாடுதுறை உதவி பங்குத்தந்தை கஷ்மீர்ராஜ் அடிகளார், புனித அந்தோணியார் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் அருட்சகோதரி கேத்தரின், தூய மரியன்னை இல்ல தலைவர் அருட்சகோதரி மரியபுஷ்பம், அந்தோணியார் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் அருட்சகோதரி பாத்திமா செல்வி, திருஇருதய சகோதரர்கள் மரியதாஸ், டேவிட் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூறைநாடு புனித அந்தோணியார் ஆலய பங்குத்தந்தை அருட்திரு.ஜான் பிரிட்டோ அடிகளார் தேம்பாவணி மகளிர் தையல் பயிற்சி மையத்தை திறந்து வைத்து ஆசி வழங்கினார். மயிலாடுதுறை, மூவலூர், சோழம்பேட்டை, வாணாதிராஜபுரம், கோழிகுத்தி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பயிற்சியில் இணைந்த பெண்களுக்கு தையல் உபகரணங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் நற்செய்திப் பணியாளர்கள், கிராமப்புற பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை திருஇருதய சகோதரர்கள் மற்றும் தையல் பயிற்சி மைய ஆசிரியர்கள் ஜெத்ரூத் மேரி, கற்பகம், பிரபாவதி ஆகியோர் செய்திருந்தனர்.

    Share:

Leave a Comment

Your phone number will not be published. Required fields are marked *

 

முக்கியச் செய்திகள்

Latest News