செப்டம்பர் 11, 2020. மயிலாடுதுறை மாவட்டம், மூங்கில் தோட்டம் அருகே வீட்டின் கதவை உடைத்து 6 பவுன் நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம், மூங்கில் தோட்டம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் 60 வயது மதிக்கத்தக்க சேகர் என்ற விவசாயி. இவர் நேற்று முன்தினம் காலை 10 மணி அளவில் தனது குடும்பத்தினருடன் அருகே உள்ள தனது உறவினர் வீட்டு காதணி விழாவிற்கு சென்றுள்ளார். இவர் குடும்பத்தினருடன் மதியம் 2 மணியளவில் தனது வீட்டிற்கு திரும்பிய போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்த போது வீட்டிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 6 பவுன் நகை மற்றும் ரூ.75 ஆயிரம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் சேகர் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் நகை மற்றும் பணத்தை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
Your phone number will not be published. Required fields are marked *