Breaking News
  •   |  
  • தெலுங்கானாவில் சிக்கி தவிக்கும் மயிலாடுதுறை மக்கள்
  •   |  
  • மயிலாடுதுறையில் புதிய சாலை அமைக்கும் போது, பழைய சாலையை ஏன் தோண்டி எடுப்பதில்லை? நீதிமன்றம் கேள்வி
  •   |  
  • நான்காவது முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்ததி ல் பெருமையடைகிறேன்- முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
  •   |  
  • மயிலாடுதுறை பள்ளி கட்டிட பூமி பூஜை துவக்கவிழா
  •   |  
  • மயிலாடுதுறை ரீசார்ஜ் செய்ய வந்த பெண். இளைஞர்.. இப்போ கம்பி எண்ணுகிறார் தம்பி!
  •   |  
  • மயிலாடுதுறை - இலவச கொரோனா பரிசோதனை முகாம்
  •   |  
  • சீர்காழியில் உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கும் 3 லட்சம் வழங்க முதலமைச்சர் உத்தரவு
  •   |  
  • கொரோனா நோயாளிகள் திடீர் போராட்டம்
  •   |  
  • மயிலாடுதுறை அருகே திருட்டு சம்பவம்.
மயிலாடுதுறை - இலவச கொரோனா பரிசோதனை முகாம்
- மயிலாடுதுறை T.பிரபு | நேரம்: Thursday, September 03, 2020, 10:49 PM | Views (651)
IMG

செப்டம்பர் 3, 2020. மயிலாடுதுறை மாவட்டம். மயிலாடுதுறையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் அவற்றை கட்டுப்படுத்த மயிலாடுதுறை நகராட்சி கிருமி நாசினி தெளித்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இருப்பினும் மயிலாடுதுறையில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து இருக்கிறது. இதனை அடுத்து மயிலாடுதுறை சுகாதாரத்துறை சார்பில் தடுப்பு நடவடிக்கையாக இலவச கொரோனா பரிசோதனை மருத்துவ முகாம் பொதுமக்களுக்காக நடத்தப்பட்டது. இதனை நகராட்சி ஆணையர் அண்ணாமலை, வட்டாட்சியர் மருத்துவ அலுவலர் சரத்சந்தர் தலைமையில் சேந்தங்குடி நகராட்சி தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.

இதனை மயிலாடுதுறை மாவட்ட சிறப்பு அலுவலர் லலிதா தொடங்கி வைத்தார். இதில் ஏராளமானோர் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டு பரிசோதனை செய்தனர். இந்த முகாமின் மூலம் சளி,காய்ச்சல், இருமல் போன்ற நோய்களால் உடல்நலக்குறைவு ஏற்பட்ட முதியவர்கள் முன்னெச்சரிக்கையாக பரிசோதனை மேற்கொண்டு பாதிப்பில் இருந்து தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும். இந்த பரிசோதனை பொதுமக்களுக்கு இலவசமாக அவர்களின் நலன் கருதி நடத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அலுவலர் தெரிவித்தார்.

    Share:

Leave a Comment

Your phone number will not be published. Required fields are marked *

 

முக்கியச் செய்திகள்

Latest News