மயிலாடுதுறை: ரீசார்ஜ் செய்ய வந்த இளம்பெண்ணுக்கு எடுத்த எடுப்பிலேயே அசிங்க அசிங்கமான வீடியோக்களை செல்போனுக்கு அனுப்பிவிட்டார் முகமது அப்ரிடி.. இப்போது கம்பி எண்ணி கொண்டிருக்கிறார். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே கிளியனூர் அகரவல்லம் என்ற கிராமம் உள்ளது.. இங்கு வசித்து வந்தவர் முகமது அப்ரிடி.. 21 வயசுதான் ஆகிறது.
இவர் அதே பகுதியில் கடை வைத்து நடத்தி வருகிறார்.. இந்த கடையில் மணி டிரான்ஸ்பர் செய்து தரப்படுகிறது.. அதேபோல, செல்போன் ரீசார்ஜ்-ம் உள்ளது.. அதனால் அந்த பகுதி கிராம மக்கள் இவர் கடைக்குதான் பெரும்பாலும் செல்வது வழக்கம். அப்படித்தான் ஒரு இளம்பெண் ரீசார்ஜ் செய்ய போனார்.. நம்பர் என்ன என்று கேட்க, பெண்ணும் செல்போன் நம்பரை சொல்ல, அதை ஒரு நோட்டு புத்தகத்தில் குறித்து வைத்து கொண்டு ரீசார்ஜும் செய்துவிட்டார் அப்ரிடி.. அந்த பெண் சென்றுவிட்ட பிறகு கொஞ்ச நேரத்திற்கெல்லாம் மெசேஜ் ஒன்று வந்துள்ளது.. அது யார் என்று பார்த்தால் கடைக்காரர் அப்ரிடியேதான். முதலில் இதை அந்த பெண் கண்டுகொள்ளவே இல்லை.. ஆனால், மளமளவென வீடியோக்கள் வந்து விழுந்தன.. இதனால் அந்த வீடியோ என்ன என்று பார்த்தால், எல்லாமே பலான வீடியோக்கள்தான்.. பூராவும் ஆபாசம்.. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண், மாவட்ட எஸ்பி ஸ்ரீநாத்துக்கு வாட்ஸ்-அப் மூலம் புகார் தந்தார்.
இதையடுத்து, அந்த மெசேஜ் மூலம் வந்த புகாரின் அடிப்படையில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.. பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து முகமது அப்ரிடியை போலீசார் கைது செய்து, அலேக்காக தூக்கி உள்ளே வைத்துவிட்டனர்
Your phone number will not be published. Required fields are marked *