நீட் தேர்வு ரத்து மற்றும் புதிய கல்விக் கொள்கை கைவிடக் கோரியும் மத்திய அரசுக்கு எதிராக மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்பாட்டத்தில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான ராஜ்குமார் தலைமை வகித்தார். இதில் தற்போதைய சூழ்நிலையில் மாணவர்கள் கல்வி நிலையங்களுக்கு செல்லமுடிய வில்லை ஆன்லைன் வகுப்புகளும் சரிவர நடத்தவில்லை. மாணவர்கள் செமஸ்டர் தேர்வே எழுதமுடியாத நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் அதுமட்டுமல்லாமல் புதிய கல்வி கொள்கையையும் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினர்.
புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டால் ஏழை, எளிய மாணவர்களின் கல்வி உரிமை பறிக்கப்பட்டு கல்வி என்பது எட்டாக்கனியாக மாறிவிடக்கூடிய சூழல் உள்ளதாக தெரிவித்தனர். ஆர்பாட்டத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Your phone number will not be published. Required fields are marked *