Breaking News
  •   |  
  • தெலுங்கானாவில் சிக்கி தவிக்கும் மயிலாடுதுறை மக்கள்
  •   |  
  • மயிலாடுதுறையில் புதிய சாலை அமைக்கும் போது, பழைய சாலையை ஏன் தோண்டி எடுப்பதில்லை? நீதிமன்றம் கேள்வி
  •   |  
  • நான்காவது முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்ததி ல் பெருமையடைகிறேன்- முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
  •   |  
  • மயிலாடுதுறை பள்ளி கட்டிட பூமி பூஜை துவக்கவிழா
  •   |  
  • மயிலாடுதுறை ரீசார்ஜ் செய்ய வந்த பெண். இளைஞர்.. இப்போ கம்பி எண்ணுகிறார் தம்பி!
  •   |  
  • மயிலாடுதுறை - இலவச கொரோனா பரிசோதனை முகாம்
  •   |  
  • சீர்காழியில் உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கும் 3 லட்சம் வழங்க முதலமைச்சர் உத்தரவு
  •   |  
  • கொரோனா நோயாளிகள் திடீர் போராட்டம்
  •   |  
  • மயிலாடுதுறை அருகே திருட்டு சம்பவம்.
மயிலாடுதுறையில் புதிய சாலை அமைக்கும் போது, பழைய சாலையை ஏன் தோண்டி எடுப்பதில்லை? நீதிமன்றம் கேள்வி
- பிரபு | நேரம்: Sunday, August 02, 2020, 09:03 AM | Views (88)
IMG
சாலைகளை தோண்டி எடுக்கமால், அதன் மீதே மீண்டும் சாலைகளை அமைப்பது ஏன்? என பிப்ரவரி 28-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க, தமிழக நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை, நெடுஞ்சாலைத் துறை செயலாளர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் மயிலாடுதுறை வர்த்தக சபை சார்பில் தொடரப்பட்ட வழக்கில் மயிலாடுதுறையில் பட்டமங்கலம் தெருவில் புதிதாக சாலைகள் அமைக்க படுவதாகவும் பழைய சாலைகளை தோண்டி எடுக்கமால் புதிய சாலைகள் அமைக்கபடுவதால் பழைய சாலையின் உயரம் உயர்ந்துள்ளதாகவும், இதனால் வீடுகள் மழை வெள்ளத்தில் மூழ்கி பாதிக்கப்படுவதாகவும், இது தொடர்பாக அளித்த புகார் மனுவை அரசு அதிகாரிகள் உரிய முறையில் பரிசீலிக்கவில்லை எனவே உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அடங்கிய அமர்வு, தற்போது சாலைகள் அமைக்கும் போது ஏற்கனவே இருந்த சாலைகளை தோண்டி எடுத்து விட்டு அமைக்கபடுவதில்லை. இதனால் சாலைகள் உயரமாகவும் கட்டிடங்கள் மற்றும் நடைபாதைகள் கீழ் உள்ள நிலை உள்ளதாக தெரிவித்தனர்.இதனால் மழைக்காலங்களில் மழைநீர் வீடுகளுக்குள் புகுகின்றது. கழிவுநீர் வெளியேற முடியாமல் தேங்குகிறது. இதற்கு சிறந்த உதாரணமாக 1980-ம் ஆண்டு போர் நினைவுச்சின்னம் 5 அடி உயரத்திற்கு இருந்ததாகவும் ஆனால் தற்போது நிலை வேறுவிதமாக இருப்பதாகவும் நீதிபதிகள் தங்களுடைய உத்தரவில் தெரிவித்துள்ளனர். சாலைகள் அமைக்கும் போது பழைய சாலைகளை தோண்டி எடுத்த பிறகே அமைக்கப்படும் என உயர்நீதிமன்றத்தில் அளித்த உத்தரவாதத்தை பின்பற்றி சாலைகளை அமைக்கப்படுவதில்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதற்கு சாலை அமைக்கும் ஒப்பந்ததாரரை கண்காணிக்கும் அதிகரிகளை பொறுப்பு ஏற்க செய்ய வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், இது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் செயலாளர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை செயலாளர் ஆகியோரை வரும் 28-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை அன்றைய தினத்திற்கு தள்ளிவைத்தனர்.
    Share:

Leave a Comment

Your phone number will not be published. Required fields are marked *

 

முக்கியச் செய்திகள்

Latest News