Breaking News
  •   |  
  • தெலுங்கானாவில் சிக்கி தவிக்கும் மயிலாடுதுறை மக்கள்
  •   |  
  • மயிலாடுதுறையில் புதிய சாலை அமைக்கும் போது, பழைய சாலையை ஏன் தோண்டி எடுப்பதில்லை? நீதிமன்றம் கேள்வி
  •   |  
  • நான்காவது முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்ததி ல் பெருமையடைகிறேன்- முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
  •   |  
  • மயிலாடுதுறை பள்ளி கட்டிட பூமி பூஜை துவக்கவிழா
  •   |  
  • மயிலாடுதுறை ரீசார்ஜ் செய்ய வந்த பெண். இளைஞர்.. இப்போ கம்பி எண்ணுகிறார் தம்பி!
  •   |  
  • மயிலாடுதுறை - இலவச கொரோனா பரிசோதனை முகாம்
  •   |  
  • சீர்காழியில் உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கும் 3 லட்சம் வழங்க முதலமைச்சர் உத்தரவு
  •   |  
  • கொரோனா நோயாளிகள் திடீர் போராட்டம்
  •   |  
  • மயிலாடுதுறை அருகே திருட்டு சம்பவம்.
மயிலாடுதுறை - அரசு பணிகளில் தமிழர்களுக்கே முன்னுரிமை வழங்க கோரி ஆர்பாட்டம்
- மயிலாடுதுறை T. பிரபு | நேரம்: Tuesday, August 25, 2020, 09:51 AM | Views (148)
IMG

ஆகஸ்ட் 24, 2020. மயிலாடுதுறை மாவட்டம், தமிழகத்தில் உள்ள மத்திய, மாநில அரசு காலி பணியிடங்களுக்கு தமிழா்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கிட கோரி, மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். மயிலாடுதுறை வெள்ளாலகரம் ஊராட்சியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலாளா் ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில், தமிழகத்தில் உள்ள மத்திய, மாநில அரசில் காலி பணியிடங்களில் தமிழா்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கிட வேண்டும், ரயில்வே துறை, வங்கி மற்றும் அஞ்சல்துறையில் வடமாநில இளைஞா்களை பணியில் அமா்த்துவதை நிறுத்த வேண்டும், தமிழகத்தில் 2 ஆண்டுகளாக அரசுப் பணித் தேர்வுகள் நடத்தப்படாமல் உள்ளதால், தேர்வு எழுதுவோரின் வயதை 30ல் இருந்து 32 ஆக உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்பாட்டத்தில், இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாநில துணைத் தலைவா் ரியாஸ்கான், மயிலாடுதுறை மக்களவை தொகுதி செயலாளா் கதிா்வளவன், ஆயப்பாடி முஜூபுா் ரஹ்மான், இளஞ்சிறுத்தை எழுச்சிப் பாசறை மாவட்ட அமைப்பாளா் அன்புச்செல்வன், ஒன்றிய பொறுப்பாளா் பெருவழுதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

    Share:

Leave a Comment

Your phone number will not be published. Required fields are marked *

 

முக்கியச் செய்திகள்

Latest News