மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பால் வியாபாரி கணேசன். அவரது வீட்டில் வயிற்றில் குட்டியுடன் ஒரு பசு உள்ளிட்ட ஆறு பசுமாடுகளை வளர்த்து வந்தார். இந்நிலையில் இந்த ஆறு கால்நடைகளும் நேற்று மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொறையாறு போலீசார் பசுவின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
கால்நடை மருத்துவர் பாபு மாடுகளை பிரேத பரிசோதனை செய்தார். பரிசோதனையின் முடிவில் இறப்புக்கான காரணம் தெரியவரும் எனக் கூறப்படுகிறது. வாயில்லா ஜீவன்கள் இவ்வாறு உயிரிழந்தது அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Your phone number will not be published. Required fields are marked *