ஆகஸ்ட் 24 2020, மயிலாடுதுறை மாவட்டம். மனைவி இறந்த சோகத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட கணவர்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்த திருவெண்காடு பகுதியை சேர்ந்தவர் குமார். இவர் தனது வீட்டின் அருகில் சொந்தமாக டீ கடை நடத்தி வருகிறார். இவருக்கு 5 மகன்கள் மற்றும் 1 மகள் என ஆறு பிள்ளைகள் உள்ள நிலையில், இவர் தனது மனைவியுடன் இணைந்து காலை முதல் இரவு வரை இருவரும் இணைந்து டீ கடையை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், குமாரின் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால், கடந்த ஒரு வருடமாக படுத்த படுக்கையாக இருந்துள்ளார். இந்நிலையில், இவருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொண்ட போதிலும், சிகிச்சை பலனின்றி கடந்த வாரம் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து மனைவி இறந்த சோகத்தில், குமார் நேற்று இரவு விஷம் அருந்திவிட்டு குடும்பத்துடன் அமர்ந்து இருந்துள்ளார். திடீரென அவர் வாந்தி எடுத்த நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது தான் அவர் விஷம் அருந்தியது தெரிய வந்தது. இதனையடுத்து இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மனைவி உயிரிழந்த சோகத்தில் கணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..
Your phone number will not be published. Required fields are marked *