Breaking News
 •   |  
 • தெலுங்கானாவில் சிக்கி தவிக்கும் மயிலாடுதுறை மக்கள்
 •   |  
 • மயிலாடுதுறையில் புதிய சாலை அமைக்கும் போது, பழைய சாலையை ஏன் தோண்டி எடுப்பதில்லை? நீதிமன்றம் கேள்வி
 •   |  
 • நான்காவது முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்ததி ல் பெருமையடைகிறேன்- முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
 •   |  
 • மயிலாடுதுறை பள்ளி கட்டிட பூமி பூஜை துவக்கவிழா
 •   |  
 • மயிலாடுதுறை ரீசார்ஜ் செய்ய வந்த பெண். இளைஞர்.. இப்போ கம்பி எண்ணுகிறார் தம்பி!
 •   |  
 • மயிலாடுதுறை - இலவச கொரோனா பரிசோதனை முகாம்
 •   |  
 • சீர்காழியில் உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கும் 3 லட்சம் வழங்க முதலமைச்சர் உத்தரவு
 •   |  
 • கொரோனா நோயாளிகள் திடீர் போராட்டம்
 •   |  
 • மயிலாடுதுறை அருகே திருட்டு சம்பவம்.
 •   |  
 • மயிலாடுதுறையில் பொதுமக்களை ஏமாற்றிய நிதி நிறுவனம்
 •   |  
 • சீர்காழி அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவி தற்கொலை
 •   |  
 • குப்பையில் கிடந்த வெள்ளி கிரீடம்
 •   |  
 • மயிலாடுதுறை பழமையான சுரங்கம் கண்டுபிடிப்பு
 •   |  
 • சீர்காழியில் நடமாடும் ரேஷன் கடை திறப்பு
 •   |  
 • பிளாஸ்டிக் பை உபயோகித்த கடைகளுக்கு அபராதம்
 •   |  
 • பிளாஸ்டிக் பை உபயோகித்த கடைகளுக்கு அபராதம்
 •   |  
 • சீர்காழியில் தேசிய நெடுஞ்சாலை பெயர் பலகை சாயும் அபாயம்
 •   |  
 • சீர்காழி அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை
நான்காவது முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்ததி ல் பெருமையடைகிறேன்- முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
- மயிலாடுதுறை T. பிரபு | நேரம்: Saturday, August 15, 2020, 11:13 AM | Views (140)
IMG
நாட்டின் 74-வது சுதந்திர தினம் இன்று, ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. தமிழக அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அணிவகுப்பு மரியாதை ஏற்கும் மேடை அருகே வந்திறங்கிய முதல்வர் பழனிசாமி தேசியக் கொடி ஏற்றி வைத்து பின் உரையாற்றினார். நான்காவது முறையாக தேசியக் கொடியை ஏற்றிவைத்ததில் பெருமையடைகிறேன். மக்களின் அன்பு ஆதரவை பெற்றுள்ள நான் மக்களிடம் நல்வாழ்வு ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டுள்ளேன். சுதந்திரத்தின் பலனை அனைவரும் பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. கரோனா தடுப்பு தொடர்பாக மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருப்போம். நாட்டிலேயே தமிழகத்தில்தான் கரோனா உயிரிழப்பு விகிதம் குறைவாக உள்ளது. கரோனாவுக்கு சித்த மருத்துவ சிகிச்சையும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களின் ஒத்துழைப்புடன் கரோனாவை வெல்வோம் என்று உறுதிபடக் கூறுகிறேன். தமிழக அரசின் நிதி ஆதாரத்தைக் கொண்டு கரோனா தடுப்புப் பணிக்கு ரூ.6,650 கோடி செலவிடப்பட்டுள்ளது. வந்தேபாரத் மற்றும் சமுத்திர சேது இயக்கத்தின் மூலம் 64,661 வெளிநாடு தமிழர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். 4.18 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் அவர்கள் சொந்த மாநிலங்களுக்கு பத்திரமாக அனுப்பப்பட்டனர். சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் ஓய்வூதியம் 16,000 த்திலிருந்து ரூ.17,000 ஆக உயர்த்தப்படும். வீரர்களின் வாரிசுதாரர்களுக்கான குடும்ப ஓய்வூதியம், சிறப்பு ஊதியம் ரூ.8 ஆயிரத்திலிருந்து ரூ.8,500 ஆக உயர்த்தப்படும். விரைவில் பொருளாதார இயல்பு நிலையை தமிழகம் எட்டும் என பேசினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
    Share:

Leave a Comment

Your phone number will not be published. Required fields are marked *

 

முக்கியச் செய்திகள்

Latest News