Breaking News
  •   |  
  • தெலுங்கானாவில் சிக்கி தவிக்கும் மயிலாடுதுறை மக்கள்
  •   |  
  • மயிலாடுதுறையில் புதிய சாலை அமைக்கும் போது, பழைய சாலையை ஏன் தோண்டி எடுப்பதில்லை? நீதிமன்றம் கேள்வி
  •   |  
  • நான்காவது முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்ததி ல் பெருமையடைகிறேன்- முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
  •   |  
  • மயிலாடுதுறை பள்ளி கட்டிட பூமி பூஜை துவக்கவிழா
  •   |  
  • மயிலாடுதுறை ரீசார்ஜ் செய்ய வந்த பெண். இளைஞர்.. இப்போ கம்பி எண்ணுகிறார் தம்பி!
  •   |  
  • மயிலாடுதுறை - இலவச கொரோனா பரிசோதனை முகாம்
  •   |  
  • சீர்காழியில் உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கும் 3 லட்சம் வழங்க முதலமைச்சர் உத்தரவு
  •   |  
  • கொரோனா நோயாளிகள் திடீர் போராட்டம்
  •   |  
  • மயிலாடுதுறை அருகே திருட்டு சம்பவம்.
ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது என்பதன் அர்த்தம் என்ன?
- பிரபு | நேரம்: Sunday, August 02, 2020, 10:28 AM | Views (58)
IMG
ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது என்று மயிலாடுதுறைக்காரர்கள் பெருமையோடு சொல்லிக்கொள்வார்கள். ஆனால் இதைப் பொருள் அறிந்து எத்தனை பேர் சொல்கிறார்களோ தெரியவில்லை. மயூரம் என்ற வடசொல் மயிலைக் குறிப்பது. மயில் உருவில் சிவபெருமானை அம்பிகை பூஜை செய்த தலம் ஆதலால் மயூரம் அல்லது மாயூரம் எனப்பட்டது. மயிலைக் காட்டிலும் அழகிய பறவையைக் காண்பது அரிது என்பதால் ஆயிரம் பறவைகள் இருந்தாலும் மயிலுக்கு ஒப்பாகுமா என்று இதற்கு வெளிப்படையாகப் பொருள் காண்பார்கள். ஆனாலும் இதற்கு உட்பொருள் ஒன்றும் உண்டு. மாயூரம் என்பதை மயிலுக்கு மட்டும் சம்பந்தப்படுத்தாமல், அவ்வுருவெடுத்து வந்து சிவபூஜை செய்த உமை அன்னைக்கு இணைத்துப் பார்ப்பதே சிறந்த பொருளைத் தரும். அவ்வாறு மயிலம்மனாக வந்து பூஜை செய்து சுய வடிவம் பெற்றுப் பரமேஸ்வரனை மணந்து கொண்ட கௌரிக்கு நிகர் யாரும் இல்லை என்பதால் ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது எனப்பட்டது.
    Share:

Leave a Comment

Your phone number will not be published. Required fields are marked *

 

முக்கியச் செய்திகள்

Latest News