Breaking News
 •   |  
 • தெலுங்கானாவில் சிக்கி தவிக்கும் மயிலாடுதுறை மக்கள்
 •   |  
 • மயிலாடுதுறையில் புதிய சாலை அமைக்கும் போது, பழைய சாலையை ஏன் தோண்டி எடுப்பதில்லை? நீதிமன்றம் கேள்வி
 •   |  
 • நான்காவது முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்ததி ல் பெருமையடைகிறேன்- முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
 •   |  
 • மயிலாடுதுறை பள்ளி கட்டிட பூமி பூஜை துவக்கவிழா
 •   |  
 • மயிலாடுதுறை ரீசார்ஜ் செய்ய வந்த பெண். இளைஞர்.. இப்போ கம்பி எண்ணுகிறார் தம்பி!
 •   |  
 • மயிலாடுதுறை - இலவச கொரோனா பரிசோதனை முகாம்
 •   |  
 • சீர்காழியில் உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கும் 3 லட்சம் வழங்க முதலமைச்சர் உத்தரவு
 •   |  
 • கொரோனா நோயாளிகள் திடீர் போராட்டம்
 •   |  
 • மயிலாடுதுறை அருகே திருட்டு சம்பவம்.
தமிழில் வெளியான முதல் புதினம் எழுதிய மாயூரம் வேதநாயகம் பிள்ளை
- பிரபு | நேரம்: Sunday, August 02, 2020, 10:26 AM | Views (49)
IMG
மாயூரம் வேதநாயகம் பிள்ளை ஒரு புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர். இவர் 1878இல் எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் என்னும் புதினம் தமிழில் வெளியான முதல் புதினம். இவர் தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள குளத்தூரில் பிறந்தார். இவரின் பெற்றோர், திருச்சிராப்பள்ளியில் இருந்து மதுரைக்கு தொடர்வண்டியில் செல்கையில் குளத்தூர் தொடர்வண்டி நிலையத்தில் இவர் பிறந்தார். தந்தையார் சவரிமுத்துப் பிள்ளை, தாயார் ஆரோக்கிய மரி அம்மையார். தொடக்கக் கல்வியைத் தமது தந்தையிடம் கற்ற வேதநாயகம் ஆங்கிலம், தமிழ் மொழிக் கல்வியை திருச்சிராப்பள்ளியை சேர்ந்த தியாகராச பிள்ளை என்பவரிடம் பயின்றார். சிறு வயதிலேயே திருமணங்கள், விருந்தினர் வருகை போன்ற நிகழ்வுகளின் போது நகைச்சுவையான கவிதைகளை எழுதினார். தமது 25ஆம் வயதில் 1851ல் காரைக்காலைச் சேர்ந்த பாப்பம்மாள் என்ற மங்கையை திருமணம் செய்தார். இவர் நீதிமன்றங்களில் பதிவாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றிய பின் 1856இல் தரங்கம்பாடியில் முனிசீஃப் வேலையில் அமர்ந்தார். மாயவரம் மாவட்ட முனிசீப்பாக 13 ஆண்டுகள் பணி புரிந்தமையால் இவரை மாயவரம் வேதநாயகம் பிள்ளை என்றே அழைக்கலாயினர். மாயவரத்தின் நகர் மன்ற தலைவராகவும் பணியாற்றியுள்ளார். அந்தக் காலகட்டத்தில் 16 புத்தகங்கள் எழுதினார். தமிழின் முதல் புதினமான பிரதாப முதலியார் சரித்திரத்தையும் அப்போதே எழுதினார். வீணை இசைப்பதிலும் வல்லமை பெற்றிருந்தார். அவரது சமகாலத்தோரான தமிழறிஞர்கள் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, இராமலிங்க வள்ளலார், திருவாவடுதுறை மடத்தின் மகாசன்னிதானம் சுப்பிரமணிய தேசிகர், கோபாலகிருஷ்ண பாரதியார் ஆகியோருடன் நட்பு பாராட்டி நெருங்கியிருந்தார். தமிழகத்தில் பஞ்சம் ஏற்பட்டபோது, தன் சொத்துகள் அனைத்தையும் தானமாக வழங்கினார். குழந்தை திருமணம், உடன்கட்டை ஏறும் வழக்கத்தை கடுமையாக எதிர்த்தார். தமிழ் இலக்கிய வரலாற்றில் திருப்புமுனை ஏற்படுத்தியவர், மறுமலர்ச்சிக் கவிஞர், சமூக சீர்திருத்தவாதி எனப் போற்றப்படும் வேதநாயகம் பிள்ளை 63 வயதில் (1889) மறைந்தார்.
    Share:

Leave a Comment

Your phone number will not be published. Required fields are marked *

 

முக்கியச் செய்திகள்

Latest News